பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்
C : கௌரவ எம்.ஏ. சுமந்திரன், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா லேலன்ட் (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க
(ii) கௌரவ எம். எஸ். தௌபீக் - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ தருமலிங்கம் சித்தார்தன் - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ யதாமிணீ குணவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
2022 சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் தொடர்பாக கூற்றொன்றினை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க அவர்கள் முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“உண்ணாட்டரசிறை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ காமினி வலேபொட அவர்களுக்கு “இலங்கை வரைதல் தொழினுட்பவியலாளர்கள் நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம்
சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு (ஆதரவாக 179; எதிராக 01) விடப்பட்டு, பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலம் மீதான மூன்றாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 174; எதிராக 01) மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சபையால் நிறைவேற்றப்பட்டதுடன் சட்டமூலமானது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks