பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “புனர்வாழ்வுப் பணியகம்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : "அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம் " தொடர்பாக குழு நிலையின் முன்மொழியப்படவுள்ள திருத்தங்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXXIV ஆம் பகுதியையும், நான்காம் தொகுதியின் XIX ஆம் பகுதியையும், ஐந்தாம் தொகுதியின் IX ஆம் பகுதியையும் மற்றும் ஆறாம் தொகுதியின் XXI, XXII மற்றும் XXIII ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IV, V, VI, VII, VIII, IX மற்றும் X ஆம் பகுதிகளையும் மற்றும் நான்காவது தொகுதியின் VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
தென்னைப் பயிர்ச்செய்கையை விருத்தி செய்தல்
மேற்சொன்ன வினாவிற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
வர்த்தக சந்திப்பு மற்றும் ஊக்குவிப்பிற்காக ரஷ்யாவிற்கான தனது விஜயம் தொடர்பாக கூற்றொன்றினை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நலின் பிரனாந்து அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
வரி வருவாய் அதிகரிப்பு தொடர்பில் தனது உரையை மையப்படுத்தி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளமை
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2022 ஒக்தோபர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படுவது)
விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பெருந்தோட்டத் துறையினர் எதிர்கொள்ளும் உணவுப் பாதுகாப்பின்மை நிலைமை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மனோ கணேசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஒக்டோபர் 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks