பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : தேசிய பேரவையில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் 2021 யூன் 30 ஆம் திகதிய 2234/19 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் திருத்தப்பட்டு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 08 ஆம் திகதிய 2296/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்படட்ட ஒழுங்குவிதிகள்.
(iii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 ஒக்டோபர் 03 ஆம் திகதிய 2300/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பிரேமலால் ஜயசேக்கர
(iii) கௌரவ சிசிர ஜயகொடி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
இலங்கை காற்பந்து சம்மேளனம் தொடர்பான பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ றோஹண திஸாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல் - திருத்தங்களுடன்
அதனையடுத்து, 1551 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஒக்டோபர் 06ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks