E   |   සි   |  

சபை அலுவல்கள்


பாராளுமன்றக் கட்டிடடத் தொகுதியின் தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2009 ஆகஸ்ட் 31ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான பாராளுமன்றச் சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2009 பெப்பரவரி 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிக்கப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 54 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 64 வாக்குகளும் அதற்கு எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


பாராளுமன்ற சபையின் முதல்வர் பின்வரும் விடயங்களை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) சபையின் அனுமதியுடன் மீண்டும் பெற்றுக்கொண்டார்:-

(i) உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு



அதன் பின்னர் 1455 மணிக்கு, 2009 பெப்ரவரி 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks