E   |   සි   |  

2022 செப்டெம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதர உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2294/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(ii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதர உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2294/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(iii)    2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2022.08.01 முதல் 2022.08.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(iv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   ஹொரைசன் கொலிஜ் ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொலொஜி (பிறைவெட்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் கௌரவ இளமானி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 மார்ச் 30 ஆம் திகதிய 2273/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   ஸ்ரீ லங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் சமூக விஞ்ஞானத்தில் கௌரவ கல்வி இளமானி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 மார்ச் 30 ஆம் திகதிய 2273/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானசேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போசனம்

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸ்

பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 3 ஆம் இலக்க விடயமானது விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது:-
(i)    இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம்
(ii)    சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

கௌரவ லலித் வர்ண குமார அவர்களினால் வினாவொன்று கேட்கப்பட்டது


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோயிலைப் பாதுகாத்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 செப்டெம்பர் 23ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks