E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

ரணவிரு சேவா அதிகாரசபை (திருத்தம்) சட்டமூலம்

1999 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க, ரணவிரு சேவா அதிகாரசபை சட்டத்தினைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சமர்ப்பித்தார்.

"மஹிந்தானந்த அலுத்கமகே மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"

இச்சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கு கெளரவ அர்ஜுன ரணதுங்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

"குளோபல் ஹிமெனிடேரியன் பவுண்டேஷனைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"

இச்சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கு கெளரவ எட்வட் குணசேகர அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின்கீழான தீர்மானம்

1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் - - ஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2009, சனவரி மாதம் 02 ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கணும் நடைமுறைப் படுத்திக்கொண்டு செய்யப்பட்ட பிரகடனம் அங்கீகரிக்கப்படுமாக என்ற தீர்மானமானது பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகால நிலையானது பாராளுமன்றத்தால் 96 அதிகப்படியான வாக்குகளால் மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும் எதிராகப் 10 வாக்குகளும் அளிக்கப் பட்டன.


இதனையடுத்து 1628 மணியளவில் பாராளுமன்றமானது, 2009 சனவரி 7 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks