E   |   සි   |  

2022 ஜூலை 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

“கௌரவ உறுப்பினர்களே, 2022 யூலை 16 ஆம் திகதி சனிக்கிழமை தங்களுக்கு அறிவித்தவாறு, தற்போது வெற்றிடமாகவுள்ள அடுத்துவரும் சனாதிபதிப் பதவிக்கு பாராளுமன்றத்தினால் உறுப்பினரொருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், தெரிவத்தாட்சி அலுவலராக, வேட்பாளர் நியமனங்கள் பெற்றுக்கொள்ளப்படும்  பணியினைத் தற்போது ஆரம்பிக்கின்றார் என இவ்வுயரிய சபைக்கு அறிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்”


பின்வரும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டன-

(i) கௌரவ டலஸ் அழகப்பெரும
கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்மொழியப்பட்டதுடன் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்களினால் வழிமொழியப்பட்டது

(ii) கௌரவ ரணில் விக்கிரமசிங்க
கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் முன்மொழியப்பட்டதுடன் கௌரவ மனுஷ நாணயக்கார அவர்களினால் வழிமொழியப்பட்டது

(iii) கௌரவ அநுர திசாநாயக்க
கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் முன்மொழியப்பட்டதுடன் கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய அவர்களினால் வழிமொழியப்பட்டது


அதனையடுத்து, 1010 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூலை 20ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks