E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலம் சமர்ப்பித்தல் தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டமூலம் இந்தச் சட்டம் பிரயோகிக்கப்படும் ஒவ்வொரு ஆளினதும் சட்டக் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகும் புரள்வின் மீது தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரி என அழைக்கப்படும் ஒரு வரியை விதிப்பதற்கும் அறவிடுவதற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனுடன் தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான விடயங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலத்தை பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரின் சார்பாக பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார். இன்றைய தினத்துக்கான சபையின் பிரதான அலுவல்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழு இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009)இன் இருபத்துமூன்றாவது ஒதுக்கப்பட்ட தினமாகும். "குழுநிலை விவாதம்" - (டிசம்பர் 5ஆம் திகதிய தொடர்ச்சி) இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2009, 42 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் நிறைவேற்றப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 'வரவு செலவுத் திட்டம் 2009' பிரிவுக்கு விஜயம் செய்க. பின்வரும் விடயங்களும் ( இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 21வரையான இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) சபையினால் நிறைவேற்றப்பட்டன. இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் 20ஆம் இலக்க விடயம் பெயர்களை அழைப்பதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 39 பெரும்பான்மை வாக்குகளால் இன்று சபையினால் நிறைவேற்றப்பட்டது:- - உள்நாட்டு திறைசேரிச் சட்டமூலங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் - மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1) - மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2) - மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.3) - மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.4) - இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை - உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீள் கட்டளை (இல.1) - உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீள் கட்டளை (இல.2) - உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீள் கட்டளை (இல.3) - உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீள் கட்டளை (இல.4) - விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை - இறக்குமதிகள் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.1) - இறக்குமதிகள் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.2) - ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1) - ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2) - அரசியலமைப்பின் கீழான தீர்மானம் (இல.1) - அரசியலமைப்பின் கீழான தீர்மானம் (இல.2) - அரசியலமைப்பின் கீழான தீர்மானம் (இல.3) அதன் பின்னர் 1725 மணிக்கு, 2009 ஜனவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks