பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “அரசியலமைப்புக்கான இருபத்தோராம் திருத்தச்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
C : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் 2022 மே 13 ஆம் திகதி வரையில் அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் அந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட அறிக்கையின் - III ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றச் சபை முதல்வர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2021 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பாக வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 மார்ச் 10 ஆம் திகதிய 2270/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பாக சனாதிபதியினால் விதிக்கப்பட்டு, 2022 மே 18 ஆம் திகதிய 2280/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வர்த்தகப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 மார்ச் 03 ஆம் திகதிய 2269/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 மார்ச் 03 ஆம் திகதிய 2269/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 மார்ச் 09 ஆம் திகதிய 2270/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 மார்ச் 28 ஆம் திகதிய 2273/01 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2022 ஏப்ரல் 13 ஆம் திகதிய 2275/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியினால் விதிக்கப்பட்டு 2022 மே 18 ஆம் திகதிய 2280/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2022 மார்ச் 09 ஆம் திகதிய 2270/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(xvii) 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் 66 மற்றும் 69 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 117 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் குடியியல் வான்செலவு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூலை 03 ஆம் திகதிய 2078/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அவ் வர்த்தமானப் பத்திரிகையின் அச்சுப் பிழைகள் திருத்தப்பட்டு, 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் 66 மற்றும் 69 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 117 ஆம் பிரிவின் கீழ் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூன் 06 ஆம் திகதிய 2283/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒன்பதாவது அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய அமைச்சுசார் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(iii) கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
கௌரவ (திருமதி) மஞ்சுளா திசாநாயக்க அவர்களினால் வினாவொன்று கேட்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கல்வித்துறை பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1705 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜூன் 22ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks