E   |   සි   |  

சபை அலுவல்கள்


பிரேரணை முன்னறிவித்தல்கள்

பின்வரும் தெரிகுழுக்களுக்கு 2009 ஜூன் 30ஆந் திகதிவரை மேலுமொரு கால நீடிப்பை வழங்க வேண்டுமென்று பாராளுமன்றச் சபை முதல்வரால் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளுக்குச் சபை இணங்கியது:-
  1. தேர்தல் மறுசீரமைப்புகள் பற்றிய பாராளுமன்றத் தெரிகுழு

  2. வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துக்களைப்பற்றி ஆராய்வதற்கான
    பாராளுமன்றத் தெரிகுழு

  3. 3மனிதரால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளை விசாரணை செய்வதற்கும் அவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்குமான பாராளுமன்றத் தெரிகுழு
சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழு

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் "குழுநிலை விவாதத்திற்கென" ஒதுக்கப்பட்ட பதினெட்டாவது நாள் இன்றாகும். - (நவெம்பர் 28ஆந் திகதியிலிருந்து தொடர்கிறது).

[வரவு செலவுத் திட்டம் 2009]


ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

"இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களின் அவலங்கள்" பற்றிய ஒத்திவைப்பு
வேளையின் போதான பிரேரணையானது கெளரவ எம். ரி். ஹசன் அலி பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2008 திசெம்பர் 2ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks