E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ (திருமதி) நிருபமா ராஜபக்ஷ் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களைச் சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. (i) "இராமகிருஷ்ண சாரதா மிஷன் (இலங்கைக்கிளை)யைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்" (ii) "இலங்கைப் பொருளியற் கழகத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்" இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) - குழு இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) மீதான விவாதத்துக்கென ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாம் நாளாகும். "குழு நிலை விவாதம்"- (பரிசீலனை நவம்பர் 20 ஆம் திகதி) [வரவு செலவுத் திட்டம் 2009] குறைநிரப்புத் தொகை - தலைப்பு 126 - நிகழ்ச்சித்திட்டம் 2: (1,736,000,000 ரூபா) - கல்வி அமைச்சு சபையால் நிறைவேற்றப்பட்டது. (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊடகங்கள் மூலமாகத் தொடுக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ துலீப் விஜேசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2008 நவம்பர் 24 ஆம் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks