E   |   සි   |  

2022 மார்ச் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை

(ii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின்  2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 மார்ச் 21 ஆம் திகதிய 2272/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(iii)    திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 8 மற்றும் 30 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு இயல்புகூறுகள் மற்றும் பாதுகாப்பு இயல்புக் கூறுகள் முகாமை முறை தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 ஒக்டோபர் 16 ஆம் திகதிய 2249/50 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 10/2021)
(iv)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 01 ஆம் திகதிய 2260/78 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 01/2022)
(v)    காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ் வருடாந்த மதுபான உரிமக் கட்டணங்கள் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 01 ஆம் திகதிய 2260/79 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 02/2022)
(vi)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 06 ஆம் திகதிய 2261/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை
(vii)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரிதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே            -     மூன்று மனுக்கள்                    
(ii)    கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

உரம் தொடர்பான பிரச்சினைகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கனடாவின் ஒன்டாரியோ பாராளுமன்றத்தில் இலங்கை மீதான இனப்படுகொலை தீர்மானம் தொடர்பாக 2022.03.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சார்பாக பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

விலங்கின நலம்பேணலை ஏற்பாடு செய்வதற்கும் விலங்குகளைக் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதற்கும்; (475 ஆம் அத்தியாயமான) விலங்குகளைக் கொடுமைப்படுத்துதலைத் தடுத்தல் கட்டளைச்சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமாக

“விலங்கின நலம்பேணல்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ கமத்தொழில் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையினை சபை ஏற்றுக் கொண்டது-

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட முறையில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிதற்காக மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் குறித்த பாராளுமன்ற விசேட குழுவுக்கு வழங்கப்பட்ட கால எல்லை, 2022 மே 31 ஆம் திகதி வரை நீடிப்புச் செய்யப்படுமாக


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ரோஹண பண்டார அவர்களுக்கு “டாக்டர் எஸ்.எஸ். குணவர்தன சுதேச ஆயுர்வேத அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்
(ii)    கௌரவ வடிவேல் சுரேஷ்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கள அலுவலர்களுக்கு தேர்தல் வேட்பாளராகும் உரிமை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜகத் குமார சுமிராரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1733 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மார்ச் 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks