E   |   සි   |  

2022 பெப்ரவரி 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்."


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும் ;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXIX மற்றும் XXX ஆம் பகுதிகளையும், மற்றும் நான்காவது தொகுதியின் XIX, XX மற்றும் XXI ஆம் பகுதிகளையும்;  மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXIII, XXIV, XXV, XXVI, XXVII, XXVIII, XXIX, XXX மற்றும் XXXI ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் X, XI, XII, XIII, XIV மற்றும் XV ஆம் பகுதிகள்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது —
•    அம்பாந்தோட்டை, அநுராதபுரம், வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் கனிய வளங்கள் (கருங்கல்) அகழ்விற்காக அரசின் காணியை குத்தகைக்கு வழங்குதல், நிர்வகித்தல் மற்றும் அரசிறை அறவிடல் தொடர்பான செயலாற்றல் கணக்காய்வு அறிக்கையின் - VII ஆம் பகுதி - 2021;
•    இலங்கையில் நிலக்கீழ் நீர் முகாமைத்துவத்தின் சட்டரீதியான பொறிமுறை மற்றும் அதன் தொழிற்பாட்டினை மதிப்பீடு செய்தல் தொடர்பான கணக்காய்வு அறிக்கையின்  - I ஆம் பகுதி - 2022;
•    ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய சமூகம் மற்றும் சமூக பொருளாதார மத்திய நிலையத்திற்கும் இடையில் வீதி நுழைவினை மேம்படுத்தும் செயலாற்றுகை அறிக்கை தொடர்பான கணக்காய்வு அறிக்கையின் - II ஆம் பகுதி - 2022; மற்றும்
•    புதிய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி புதிய மூலங்களை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டின் மதிப்பீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கையின் - III ஆம் பகுதி - 2022


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எஸ்.எம். சந்திரசேன அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய                    
(ii)    கௌரவ பியல் நிசாந்த த சில்வா        -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ சாரதீ துஷ்மந்த                    
(iv)    கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி                    
(v)    கௌரவ மிலான் ஜயதிலக்க                -       இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ ஆனந்த ரத்னாயக்க
(ii)    மறைந்த கௌரவ ஆர். ஆர். டப்ளியூ. ராஜபக்ஷ
(iii)    மறைந்த கௌரவ சோமவீர சந்திரசிறி
(iv)    மறைந்த கௌரவ பீ.பி. திசாநாயக்க
(v)    மறைந்த கௌரவ எச். ஆர். மித்ரபால


அதனையடுத்து, 1611 மணியளவில் பாராளுமன்றமானது 2022 மார்ச் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks