E   |   සි   |  

2022 பெப்ரவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் முன்னேற்ற அறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மன்றத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்

(iii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் துருக்கி குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரிவிதிப்பைத் நீக்குவதற்கும் வரி செலுத்தாது தட்டிக் கழித்தல் மற்றும் தவிர்ப்பு என்பவற்றைத் தடுப்பதற்குமாக 2022 சனவரி 28 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    ‍கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நாமல் ராஜபக்ஷ                      -      மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ அநுர திசாநாயக்க             -    ஐந்து மனுக்கள்
(iii)    கௌரவ விஜித ஹேரத்                    
(iv)    கௌரவ அமரகீர்த்தி அதுகோரள                    
(v)    கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான இடையூறுகள்

மேற்சொன்ன வினாவிற்கு வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பில மற்றும் சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க ஆகியோர் பதிலளித்தனர்.

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

கரும்புப் பயிர்ச்செய்கைக்காக காணியைக் கைப்பற்றல்

மேற்சொன்ன வினாவிற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர ஆகியோர் பதிலளித்தனர்.

(iii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

கோவிட்-19 தடுப்பூசி ஏற்றல்

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    சதொசவினால் பிரச்சாரப்படுத்தும் சூழல் நட்புமிக்க போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொடர்பில் கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
(ii)    நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நிதி சபையின் அறிக்கை தொடர்பாக 2022.02.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி அமைச்சர் சார்பாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    பொதுச் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஐந்து ஒழுங்குவிதிகள்
(iii)    செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv)    தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம்
(v)    மரங்களை வெட்டி வீழ்த்துதல் (கட்டுப்படுத்தல்) சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ யதாமிணீ குணவர்தன
(ii)    கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“புல் நிலங்கள் முதலியன தொடர்பாக பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எச். நந்தசேன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 பெப்ரவரி 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks