பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வ செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுதல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையுடன் தொடர்புடைய சாட்சிகள், குறிப்புக்களின் தொகுதிகள் உள்ளடங்கலான அறிக்கை தொடர்பானது
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் ;
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIX ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVI மற்றும் XXXVII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIX ஆம் பகுதியையும்; மற்றும்
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIII, XXIV மற்றும் XXV ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVIII, XIX, XX, XXI, XXII மற்றும் XXIII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XI, XII மற்றும் XIII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் VIII, IX மற்றும் X ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2018/2019 ஆம் ஆண்டுக்கான பிசீசீ லங்கா கம்பனியின் ஆண்டறிக்கை
(v) 2015/2016, 2016/2017 மற்றும் 2017/2018 ஆம் ஆண்டுகளுக்கான ஜீ.எஸ்.எம்.பி டெக்னிக்கல் சர்விசஸ் (பிரைவட்) லிமிட்டெட்டின வருடாந்த அறிக்கைகள்
(vi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 பெப்ரவரி 21 ஆம் திகதிய 2268/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் “சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய
(ii) கௌரவ தேனுக விதானகமகே
(iii) கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன
(iv) கௌரவ வசந்த யாப்பாபண்டார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
பொலன்னறுவை தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரொசான் ரணசிங்க அவர்கள் 2022.02.23 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, புலமைச் சொத்து சட்டத்தைத் திருத்துவதற்காக
“புலமைச் சொத்து (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய சமூக-பொருளாதார நிலைமை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இரான் விக்கிரமரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1727 மணியளவில் பாராளுமன்றமானது 2022 பெப்ரவரி 24ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks