E   |   සි   |  

2022 பெப்ரவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : “விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
C : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரைகள் எழுதப்படல்
D : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
E : வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
F : சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
G : “ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஆண்டறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஆண்டறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஆண்டறிக்கையும் கணக்குக் கூற்றும்

(iv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கனக ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஜயந்த சமரவீர                               -        இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார                    
(iii)    கௌரவ திலிப் வெதஆரச்சி                    
(iv)    கௌரவ முஜிபுர் ரஹுமான்                    
(v)    கௌரவ லலித் எல்லாவல                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு இடையூறுகள்
 
மேற்சொன்ன வினாவிற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

மிகைக்கட்டண வரியினை விதிப்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“மிகைக்கட்டண வரி”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(ii)    கௌரவ நாலக பண்டார கோட்டேகொட


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“டெங்கு தடுப்புக்கு முறையான திட்டத்தை செயல்படுத்துதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அநுப பஸ்குவல் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1719 மணியளவில் பாராளுமன்றமானது 2022 பெப்ரவரி 23ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks