பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஆண்டறிக்கை (கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கைக்குப் பதிலளித்தல் உள்ளடங்கலாக) - 2018
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்.
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை.
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை.
(v) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை.
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ தயாசிறி ஜயசேக்கர
(iii) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(iv) கௌரவ அமரகீர்த்தி அதுகோரள
(v) கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ திஸகுட்டி ஆரச்சி
வங்கியொன்று குறித்து கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தவதற்காக
“பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம்
(iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(v) மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டமூலம்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ நலின் பண்டார ஜயமஹ
(ii) கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கைதிகளின் உரிமைகள், நலனோம்புகை போன்ற தொடர்பாக ஆராயும் விசேட குழு” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிரேமலால் ஜயசேக்கர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2022 பெப்ரவரி 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks