பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாயசபையின் செயலாற்றுகை அறிக்கை.
(ii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஆண்டு அறிக்கையும் கணக்குக் கூற்றும்.
(v) 2017/2018 ஆம் ஆண்டுக்கான லங்கா லேலன்ட் (தனியார்) லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை.
(vi) 2017/2018 மற்றும் 2018/2019 ஆம் ஆண்டுகளுக்கான மாந்தை சோல்ட் லிமிடெட்டின் ஆண்டறிக்கைகளும் கணக்குகளும்
(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்பீட்டுச் சட்டத்தின் பிரிவு 2(அ) மற்றும் பிரிவு 11 (1) (ஒ) இன் வாசிப்பிற்கும் அமைச்சரவையின் அனுமதிக்கும் இணங்க உருவாக்கப்பட்ட இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) இந்திய மீனவர்களால் இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறல் தொடர்பில் கூற்றொன்றினை கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்தார்.
(ii) சிலோன் கறுவாவினால் பெறப்பட்ட சர்வதேச சுட்டி அங்கீகாரம் தொடர்பில் கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது:-
(i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(v) மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ ஹெக்டர் அப்புஹாமி
(ii) கௌரவ மொஹமட் முஸம்மில்
அதனையடுத்து, 1650 மணியளவில் பாராளுமன்றமானது 2022 பெப்ரவரி 10ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks