பார்க்க

E   |   සි   |  

2022 பெப்ரவரி 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : சபைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
F : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
H : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
I : பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
J : பின்வரிசைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
K : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் 32 களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2020 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XII, XIII, XIV, XV, XVI மற்றும் XVII ஆம் பகுதிகளையும்  மூன்றாவது தொகுதியின் VI, VII, VIII, IX மற்றும் X ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் II, III, IV, V, VI மற்றும் VII ஆம் பகுதிகள்
(ii)    2018ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழ், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின், 2019.01.01 முதல் 2019.12.31 வரையான காலப்பகுதிக்கான கணக்காய்வு தலைமை அதிபதியின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் சுயாதீன கணக்காய்வாளரின் அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான தொல்லியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத் தொழிற்சாலைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கைகள்
(v)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கைகள்
(vi)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(x)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஆண்டறிக்கை
(xi)    திருகோணமலை எண்ணெய்த் தாங்கித் தொகுதி பற்றிய ‘எண்ணெய்த் தாங்கிகள் மீண்டும் நாட்டுக்கு’ அறிக்கை

(xii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xiii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xiv)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xv)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 சனவரி 13 ஆம் திகதிய 2262/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xvi)    2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2021.11.22 முதல் 2021.12.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பரிசீலிக்கப்பட்ட சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ  கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு பதிலாக கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நிதி சபையின் அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(139 ஆம் அத்தியாயமான) வேலையாட்களின் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“வேலையாட்கள் நட்டஈடு (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு “இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறி திறந்த நிறுவனத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 4ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-
(i)    தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள்
(ii)    மஹபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii)    ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம்  —  இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ சமிந்த விஜேசிறி
(ii)    கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நாட்டிற்கான மீள்புத்தாக்க சக்தி திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிமல் பியதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2022 பெப்ரவரி 09ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks