பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : தவிசாளர் குழாமில் உள்ளடக்கப்படவுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும் ;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும் ;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI மற்றும் VII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் IV மற்றும் V ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடத்தின் துறைகள் தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2164/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) தெரிவுக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 114 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காக தெரிவுக் குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(ii) தெரிவுக்குழு
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் போது தெரிவுக் குழுவில் பின்வரும் பன்னிரண்டு (12) உறுப்பினர்களும் சேவையாற்றுவார்களாக :—
கௌரவ நிமல் சிறிபால த சில்வா
கௌரவ தினேஷ் குணவர்தன
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ டலஸ் அழகப்பெரும
கௌரவ விமல் வீரவங்ச
கௌரவ பிரசன்ன ரணதுங்க
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ கயந்த கருணாதிலக்க
கௌரவ ரஊப் ஹகீம்
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
(iii) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 (1) இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர், அக்குழுவின் அங்கத்துவ உறுப்பினர்களிலிருந்து அக் குழுவினாலேயே தெரிவுசெய்யப்படுதல் வேண்டும்
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2021 ஒக்டோபர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2022 ஜனவரி 18ஆம் திகதி அதிமேதகு சனாதிபதி அவர்களினால் நிகழ்த்தப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜனவரி 20ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks