E   |   සි   |  

2021 டிசம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
B : இணைந்த வருடாந்த பொதுக் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும்;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும்;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VII, VIII, IX மற்றும் X ஆம் பகுதிகள் மற்றும் நான்காம் தொகுதியின் IV, V மற்றும் VI பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் பற்றிய உயர்கல்வி தொடர்பான தேசிய நிலையத்தின் ஆண்டறிக்கை
(iv)    2019 ஆம் ஆண்டுக்கான ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்)  வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(v)    2019 ஆம் ஆண்டுக்கான தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் (களனிப் பல்கலைக்கழகம்) வருடாந்த அறிக்கை
(vi)    2019 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(viii)    2019 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ix)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் (பொல்கொல்ல) ஆண்டறிக்கை
(x)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xi)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை மன்றத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(xii)    2018/2019 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(xiii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை

(xiv) 2021 - 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பொது முலீட்டு நிகழ்ச்சித்திட்டம்
(xv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  வெளிநாட்டு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பிரசன்ன ரணதுங்க                -        இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பியல் நிசாந்த த சில்வா           -      இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க                    
(iv)    கௌரவ றோஹண திஸாநாயக்க                    
(v)    கௌரவ அஸோக அபேசிங்ஹ              -     இரண்டு மனுக்கள்
(vi)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்    
(vii)    கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

ஹிக்கடுவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்தல்

மேற்சொன்ன வினாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) சட்டத்தைத் திருத்துவதற்காக

“மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட முறையில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிதற்காக மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 102 இன் பிரகாரம் குறித்த பாராளுமன்ற விசேட குழுவுக்கு வழங்கப்பட்ட கால எல்லை, 2022 மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிப்புச் செய்யப்படுமாக.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களுக்கு “திறன் விருத்தி கற்கைகள் நிலையத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  (2022) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் நாள் - குழு நிலை விவாதம்

ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்), 93 பெரும்பான்மை வாக்குகளால்  (ஆதரவாக 157; எதிராக 64) சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 17 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
(iii)    உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iv)    துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(v)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(vi)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள்
(vii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(viii)    உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(ix)    அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் தீர்மானம்


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜனவரி 11ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks