E   |   සි   |  

2021 டிசம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(v) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  தேசிய கணக்காய்வு அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  நிதி ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2021 யூலை 18 ஆம் திகதிய 2236/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2021 ஆகஸ்ட் 11 ஆம் திகதிய 2240/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு  2021 செப்தெம்பர் 07 ஆம் திகதிய 2244/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2021 ஒக்டோபர் 11 ஆம் திகதிய 2249/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2021 ஒக்டோபர் 13 ஆம் திகதிய 2249/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு  2021 நவெம்பர் 02 ஆம் திகதிய 2252/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு  2021 நவெம்பர் 02 ஆம் திகதிய 2252/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 நவெம்பர் 12 ஆம் திகதிய 2253/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 11/2021)
(xv)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின்  கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 நவெம்பர் 12 ஆம் திகதிய 2253/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களுக்கு பதிலாக லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    தொழிநுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v)    வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி         
(ii)    கௌரவ கனக ஹேரத்                    
(iii)    கௌரவ சனத் நிசாந்த                    
(iv)    கௌரவ நிபுண ரணவக                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

அந்நிய கையிருப்பின் பற்றாக்குறை தொடர்பாக 2021.12.03 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி அமைச்சர் சார்பாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  (2022) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii)    நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    இலங்கைத் தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்திக்குத் தேவையான கால்நடை உணவு பற்றாக்குறை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1829 மணியளவில் பாராளுமன்றமானது 2021 டிசம்பர் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks