பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : 2021 திசம்பர் மாதம் 03 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபாபீடத்திலும் பாராளுமன்ற வளாகத்திலும் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கும் எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பரிந்துரைப்பதற்குமான விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்களை நியமித்தல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017/2018 ஆம் ஆண்டுக்கான கல் ஒய பிளான்டேஷன்ஸ் (பிறைவேற்) லிமிற்றெற்றின் வருடாந்த அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்றுகை அறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம்,
(i) மனித உரிமைகள் அமைப்பு (கூட்டிணைத்தல்)
(ii) சிவில் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)
சட்டமூலங்கள் பற்றிய அறிக்கைகள் கௌரவ நீதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜயந்த சமரவீர - ஆறு மனுக்கள்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
(iii) கௌரவ நலின் பிரனாந்து
(iv) கௌரவ மர்ஜான் பளீல்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்தோராம் நாள் - குழு நிலை விவாதம்
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அம்பாறையில் அமைந்துள்ள ஹார்டி உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1811 மணியளவில் பாராளுமன்றமானது 2021 டிசம்பர் 09ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2022]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks