E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் பிரதான அலுவல்கள்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2008 நவம்பர் 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிக்கப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விவாதம் 75 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 85 வாக்குகளும் அதற்கு எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


பின்வரும் விடயங்களும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2,3 மற்றும் 4ஆம் விடயங்களாகக் காணப்படுகின்றன) சபையினால் நிறைவேற்றப்பட்டன:-

(i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(ii) நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்



அதன் பின்னர் 1634 மணிக்கு, 2008 நவம்பர் 6ஆம் திகதி வியாழக்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks