பார்க்க

E   |   සි   |  

2021 டிசம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான பாளி, பௌத்த கல்வி பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் (களனிப் பல்கலைக்கழகம்) ஆண்டறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக தகவல் விஞ்ஞான நிறுவனத்தின் (கொழும்புப் பல்கலைக்கழகம்) ஆண்டறிக்கை
(iv)    2019 ஆம் ஆண்டுக்கான சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் (கிழக்குப் பல்கலைக்கழம், இலங்கை) வருடாந்த அறிக்கை
(v)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi)    2019 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (கொழும்புப் பல்கலைக்கழகம்) ஆண்டறிக்கை

(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  கட்டிடங்கள் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  அரசாங்க தொழிற்சாலைத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா      -    இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ டி.வீ. சானக                   
(iii)    கௌரவ சிசிர ஜயகொடி                   
(iv)    கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ             -     இரண்டு மனுக்கள்                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  (2022) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்

(ii) குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1230 மணியளவில் பாராளுமன்றமானது 2021 டிசம்பர் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks