பார்க்க

E   |   සි   |  

2021 டிசம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை

(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  பெனடிக்ட் XVI கத்தலிக் இன்ஸ்ரிரியுற் ஒப் ஹயர் எடியுகேஷன் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தகவல் தொழினுட்பவியல் கௌரவ விஞ்ஞான இளமாணி  பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 23 ஆம் திகதிய 2220/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் உயிரிமருத்துவ விஞ்ஞானத்தில் கௌரவ விஞ்ஞான இளமாணி மற்றும் பொதுச் சுகாதாரத்தில் மற்றும் போஷணையில் கௌரவ விஞ்ஞான இளமாணி பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2224/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  ஈசொப்ட் மெற்றோ கம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வியாபார முகாமைத்துவ இளமாணி (கௌரவம்) பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மே 20 ஆம் திகதிய 2228/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  இன்ரநஷனல் இன்சிரியூட் ஒப் ஹெல்த் சயன்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வியாபார நிருவாக மாணி (சிறப்பு) பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 11 ஆம் திகதிய 2231/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் “ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க        -    இரண்டு மனுக்கள்                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

அந்நிய கையிருப்பின் பற்றாக்குறை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  (2022) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாள் - குழு நிலை விவாதம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மிகைசேவை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள அதிபர்களை, அதிபர் சேவையில் நிரந்தரமாக்கல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1816 மணியளவில் பாராளுமன்றமானது 2021 டிசம்பர் 04ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks