பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியினது ஹிங்குரான சீனித் தொழிற்சாலையின் செயற்பாட்டுப் பணிகளுக்காக தாபிக்கப்பட்ட வ/ப கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) கம்பனியின் தொழிற்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின்  -- III ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை

(ii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  நிலையான அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 நவம்பர் 03 ஆம் திகதிய 2252/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ திலிப் வெதஆரச்சி                           
(ii)    கௌரவ மதுர விதானகே                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ முஜிபுர் ரஹுமான்

அவரது தொலைபேசி இலக்கம் மற்றும் தொலைபேசி உரையாடல் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  (2022) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினோராம் நாள் - குழு நிலை விவாதம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அரச ஊழியர் ஓய்வுக்கான பணிக்கொடையை விரைவுபடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1741 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 27ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks