பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வருடாந்த அறிக்கையும் நிதி அறிக்கையும்
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்

(iii) 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவுடன் உடன் வாசிக்க வேண்டிய, 53 ஆம் பிரிவின் கீழ் கைத்தொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 18 ஆம் திகதிய 2232/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜனக பண்டார தென்னகோன் அவர்களுக்கு பதிலாக கௌரவ சுதத் மஞ்சுல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ புத்திக பத்திறண                   
(ii)    கௌரவ மிலான் ஜயதிலக்க                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பில் கூற்றொன்றினை கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ நிமல் லான்சா அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  (2022) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii)    தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை (2013)
(iii)    தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை (2014)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளை அரச நியமனங்களில் உள்ளீர்த்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1747 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 25ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks