பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 35(1) ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டத்தை அச்சட்டத்தின் 35(3) ஆம் பிரிவின் கீழ்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிலாக கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ முஜிபுர் ரஹுமான் - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
தனிப்பட்ட விளக்கங்கள்
(i) கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்கள் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் மற்றும் உர இறக்குமதி
(ii) கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத் அவர்கள் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள்
(iii) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
கௌரவ திஸகுட்டி ஆரச்சி அவர்கள் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்காக
“குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூல (2022) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 153 பேரும் எதிராக 60 பேரும் வாக்களித்தனர்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1720 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2022]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks