பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2020 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஆண்டறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டலஸ் அழகப்பெரும
(ii) கௌரவ வாசுதேவ நாணாயக்கார
(iii) கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த
(iv) கௌரவ குமார வெல்கம
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2021 ஆகஸ்ட் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு “இலங்கை பட்டயக் கப்பற் தரகர்கள் நிறுவகத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1730 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2021 நவம்பர் 22ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2022]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks