பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  2021.11.17 அன்று கௌரவ சமிந்த விஜேசிறி மற்றும் கௌரவ ஹேஷா விதானகே ஆகியோரால் எழுப்பப்பட்ட கேள்விகள் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறாமை தொடர்பான விடயம் பற்றிய விளக்கம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXVII ஆம் பகுதியையும் ;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் V ஆம் பகுதியையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் III ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை

(iii) 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சோ்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 142 ஆம் பிரிவின் கீழ், சுகாதார அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 19 ஆம் திகதிய 2241/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv)    2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 142 ஆம் பிரிவின் கீழ், சுகாதார அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 செப்தெம்பர் 04 ஆம் திகதிய 2243/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அஜித் மான்னப்பெரும
(ii)    கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2022) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ காமினி வலேபொட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1730 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2021 நவம்பர் 20ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks