பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் ;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XV மற்றும் XVI ஆம் பகுதிகளையும் ; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் II, III, IV, V மற்றும் VI ஆம் பகுதிகளையும் மற்றும் நான்காவது தொகுதியின் I, II மற்றும்  III ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கைகள்

(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர            -    இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்                
(iii)    கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார        -    இரண்டு மனுக்கள்     
(iv)    கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க
(v)    கௌரவ சாந்த பண்டார                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பலாங்கொடையிலுள்ள சுண்ணாம்புப் படிவுலிருந்து உச்சமட்ட பொருளாதார நன்மைகளைப் பெறல் தொடர்பாக 2021.11.15 அன்று கௌரவ ஹேஷா விதானகே அவர்களினால் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2022) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்காம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“புத்தளம் மாவட்டத்தில் காடுகள் அழிப்பு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1735 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2021 நவம்பர் 19ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks