பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 15ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  கௌரவ எம்.ஏ. சுமந்திரன், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ ரோஹண பண்டார                    
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட முறையில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிதற்காக மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 102 இன் பிரகாரம் குறித்த பாராளுமன்ற விசேட குழுவுக்கு வழங்கப்பட்ட கால எல்லை, 2022 சனவரி 16 ஆம் திகதி வரை நீடிப்புச் செய்யப்படுமாக.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய அவர்களுக்கு “ஷைலி கல்விசார் மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2022) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பலாங்கொடையிலுள்ள சுண்ணாம்புப் படிவுலிருந்து உச்சமட்ட பொருளாதார நன்மைகளைப் பெறல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹேஷா விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1730 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2021 நவம்பர் 16ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks