பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2019 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், அமைச்சரவை அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க

தகவல்களை வழங்குவதிலான அமைச்சர்களின் பொறுப்பு


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ அசங்க நவரத்ன அவர்களுக்கு “மாபொட்டுவன ஸ்ரீ பியரத்தன தேரர் சுவசெவன மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2022) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் இயற்கை இடரை தணிக்கும் நடவடிக்கைகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1730 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2021 நவம்பர் 15ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks