பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018/2019 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேசனின் வருடாந்த அறிக்கை
(ii) 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எஸ்.எம். சந்திரசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜயந்த சமரவீர
(ii) கௌரவ ஜகத் புஷ்பகுமார
(iii) கௌரவ மிலான் ஜயதிலக - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநயாக்க
‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பான சிக்கல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் நீதி அமைச்சர் எம். யூ. எம். அலி சப்ரி ஆகியோர் பதிலளித்தனர்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் கூற்றொன்றினை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்கள் முன்வைத்தார்.
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ மைத்திரிபால சிறிசேன
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் தன்னைப் பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது சட்டமூலம்
(ii) வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம்
(iii) பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iv) காணி எடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன
(ii) கௌரவ அசோக பிரியந்த
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் புகார்களை விசாரணை செய்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1400 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks