பார்க்க

E   |   සි   |  

2021 ஒக்டோபர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் ஆண்டறிக்கைகள்
(ii)     2020 ஆம் ஆண்டுக்கான பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி சபையின் வருடாந்த  அறிக்கை
(v)    2019 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் ஆண்டறிக்கை
(vii)   2019 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஆண்டறிக்கை.
(viii)  2019 ஆம் ஆண்டுக்கான தி அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(ix)   2020 ஆம் ஆண்டுக்கான வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(xi)    2018 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை
(xii)    2019 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆண்டறிக்கை
(xiii)    2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்

(xiv) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61(1)(தஅ) மற்றும்(தஆ) ஆம் பிரிவுகளின் கீழ் கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2019 யூன் 03 ஆம் திகதிய 2126/6 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xv)    1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61(1)(ப) ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2021 மார்ச் 12 ஆம் திகதிய 2218/64 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvi)    1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 45(1அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 61 ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2021 மே 03 ஆம் திகதிய 2226/12 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ றோஹண திஸாநாயக்க                    
(ii)    கௌரவ கபில அதுகோரல                    -    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ அஜித் ராஜபக்ஷ  
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகள்

(ii) கௌரவ அநுர திஸாநாயக்க

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலைய ஒப்பந்தம்

மேற்சொன்ன வினாவிற்கு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோர் பதிலளித்தனர்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பாடசாலைகளை மீள திறத்தல் தொடர்பில் கூற்றொன்றினை கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


தனிப்பட்ட விளக்கங்கள்

கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க

தன்னை மற்றும் திரு. வித்யா அமரபால பற்றி கௌரவ செஹான் சேமசிங்க அவர்களின் கருத்துக்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ தொழில் அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது - தொழில்தருநரொருவர் எந்த குறைந்தபட்ச வயதில் எவரேனும் வேலையாளரை ஓய்வுபெறச் செய்யலாமோ அந்த குறைந்தபட்ச வயதுக்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானது
(ii)    வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) - 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள்

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2021.03.10 மற்றும் 2021.04.06 ஆம் திகதிளில் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 08ஆந் திகதி திங்கட்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks