பார்க்க

E   |   සි   |  

2021 ஒக்டோபர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIX ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும்;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIV ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XXV மற்றும் XXVI ஆம் பகுதிகளையும்;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIV, XXV மற்றும் XXVI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XII ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XVII மற்றும் XVIII ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும் மற்றும் மூன்றாவது தொகுதியின் I ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் - தலவாக்கலை  ஆண்டறிக்கை

(ii) (460 ஆம் அத்தியாயமான) காணி எடுத்தற் சட்டத்தின் 63(2)(ஊ) ஆம் பிரிவின்  கீழ் காணி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 செப்தெம்பர் 08 ஆம் திகதிய 2244/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iii)    2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 117(2)(ட) ஆம் பிரிவின் கீழ் சுற்றுலாத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2020 செப்தெம்பர் 08 ஆம் திகதிய 2192/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே                    
(ii)    கௌரவ சனத் நிசாந்த                    
(iii)    கௌரவ சிசிர ஜயகொடி                    
(iv)    கௌரவ விஜித ஹேரத்                                                    -     இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ அஸோக அபேசிங்ஹ                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு

மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தில் நிகழும் முறைகேடுகள் தொடர்பாக 2021.10.05 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2021 செப்தெம்பர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2021 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1632 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஒக்டோபர் 21ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks