பார்க்க

E   |   සි   |  

2021 ஒக்டோபர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயற்திறன் அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுக் கட்டிடத்தொகுதி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை

(iii) (469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புச் கட்டளைச் சட்டத்தின் 2(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் கீழ் வனசீவராசிகள் பாதுகாப்பு, மின்சாரவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் மற்றும் காடு மீள்வளர்ப்பு அத்துடன் காட்டு வள அபிவிருத்தி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தல் இராஜாங்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 09 ஆம் திகதிய 2222/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவின்  அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பதிலாக கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ சுதத் மஞ்சுல                                        
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச
கோவிட் காரணமாக கல்வித் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i)    2022 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின் போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமாக

“ஒதுக்கீடு”

எனும் சட்டமூலத்தினை கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.

கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(ii)    இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தம்) - (25 ஆம் அத்தியாயமான) இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) கட்டளைச் சட்டத்தினைத் திருத்துவதற்கானது

(iii)    தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) - (19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையினைத் திருத்துவதற்கானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ வேலு குமார் அவர்களுக்கு “யூஎன்வீ மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ இம்ரான் மஹ்ரூப் அவர்களுக்கு “அக்குறணை பைதுஸ் ஸகாத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    ஊழியர் சகாய நிதியம் (திருத்தச்) சட்டமூலம்
(iii)    ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ ஆர்.எம். ரஞ்ஜித் மத்தும பண்டார  
(ii)    கௌரவ (திருமதி) மஞ்சுளா திஸாநாயக்க


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கலைஞர்களின் படைப்பின் உரிமையைப் பாதுகாப்பதற்கான சுயாதீன அமைப்பு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஒக்டோபர் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks