பார்க்க

E   |   සි   |  

2021 ஒக்டோபர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும்; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2013, 2014, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கைகளும் கணக்குகளும்
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஹெக்டர் அப்புஹாமி
(ii)    கௌரவ வசந்த யாப்பாபண்டார     -      எட்டு மனுக்கள்                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்

மேற்சொன்ன வினாவிற்கு கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக 2021.10.05 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு “சமாதி சுகாதார சேவைகள், சுற்றாடல், விவசாய, கலாசார மற்றும் விளையாட்டு நிலையத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii) கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு “களனி பௌத்த மகளிர் தருமச் சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(iii) கெளரவ நலின் பிரனாந்து அவர்களுக்கு “நலின் பிரணாந்து மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பெற்றோலிய வளங்கள் சட்டமூலம்

சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ வருண லியனகே  
(ii)    கௌரவ அஜித் ராஜபக்ஷ


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சிறைச்சாலை முறைமையை சீர்திருத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஒக்டோபர் 07ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks