பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016, 2017, 2018, மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கைகள்
(ii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ஆண்டறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான பெருந்தொட்ட அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 யூலை 30 ஆம் திகதிய 2238/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(vi) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 செப்தெம்பர் 06 ஆம் திகதிய 2244/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2021.08.03 முதல் 2021.09.21 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ நிமல் லான்சா
(ii) கௌரவ ஜகத் புஷ்பகுமார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு மோசடி
(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தில் நிகழும் முறைகேடுகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இருதரப்பு உறவுகள் மற்றும் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான கூற்றொன்றினை வெளிநாட்டமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) பெறுமதிசோ் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ (கலாநிதி) வீ. ராதாகிருஷ்ணன்
(ii) கௌரவ மதுர விதானகே
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“உள்ளூராட்சி மன்றங்களில் நிகழ்நிலை சேவை முறைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மிலான் ஜயதிலக அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1731 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஒக்டோபர் 06ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks