பார்க்க

E   |   සි   |  

2021 ஒக்டோபர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டு, நிதி அமைச்சரின் அவதானிப்புகளுடள் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு மதிப்பீடு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான  கைத்தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயற்றிறன் அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கை.
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான காணி அமைச்சின் மற்றும் காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின்  செயலாற்றுகை அறிக்கை

(vi) 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் 20அ என்னும் பிரிவுடன் சோ்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 31 ஆம் பிரிவின் கீழ் தொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ உதய கம்மன்பில அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ மனுஷ நாணாயக்கார        -   இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ ஹேஷா விதானகே                    
(iii)    கௌரவ லலித் எல்லாவல                    
(iv)    கௌரவ மிலான் ஜயதிலக்க          -  இரண்டு மனுக்கள்                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அதனையடுத்து, 1523 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஒக்டோபர் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks