பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கைகள் மற்றும் கணக்குகள்
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஆண்டு அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வர்த்தகம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ றோஹண திஸாநாயக்க
(ii) கௌரவ அஸோக அபேசிங்ஹ - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ அசங்க நவரத்ன - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
கோவிட் காரணமாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
(ii) ஜீ.ஜீ. பொன்னம்பலம்
இராஜாங்க அமைச்சர் அனுராதபுர சிறைக்குள் நுழைந்ததன் காரணமாக தமிழ் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு நீதி அமைச்சர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மாலைதீவுக்கு மணல் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கூற்றொன்றினை சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ மனுஷ நாணாயக்கார அவர்களுக்கு “இந்திரா புற்றுநோய் நம்பிக்கைப்பொறுப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம்
(ii) தாவர, விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ முஜிபுர் ரஹுமான்
(ii) கௌரவ றோஹண திஸாநாயக்க
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் உயர்ஸ்தானிகரின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1739 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஒக்டோபர் 04ஆந் திகதி திங்கட்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks