பார்க்க

E   |   සි   |  

2021 செப்டெம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ ஜயந்த கெடகொட அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B : கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுகளுக்கான வர்த்தக அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கை
(iv)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான வலுசக்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2020 ஆம் ஆண்டுகளுக்கான தெங்கு, கித்துள் மற்றும் பனை பயிர்ச்செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பன்முகப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயல்திறன் அறிக்கை

(vii) 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் 8 ஆம் பிரிவுடன்  சோ்த்து வாசிக்கப்பட வேண்டிய   46 ஆம் பிரிவின் கீழ் தொழில் அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை
(viii)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், வர்த்தக அமைச்சின் மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பாக 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை
(ix)    (101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் 214 ஆம் பிரிவுடன் சோ்த்து வாசிக்கப்பட வேண்டிய  840 ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2021 யூலை 02 ஆம் திகதிய, 2234/67 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ காமினி லொக்குகே
(ii)    கௌரவ கயந்த கருணாதிலக்க
(iii)    கௌரவ சுதத் மஞ்சுல                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்படல்

மேற்சொன்ன வினாவிற்கு ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    ஊழியர் சகாய நிதியம் (திருத்தம்) - 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, ஊழியர் சகாய நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) - 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 (1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2021 செப்தெம்பர் 17 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, 2020 செப்டெம்பர் 08, 2021 சனவரி 07 மற்றும் 2021 ஆகஸ்ட் 06 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முப்பத்தொரு (31) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு மேலதிகமாக அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக.

ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உாிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (5) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.

மேற்படி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 18 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(ii)    துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(iii)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள்
(iv)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(v)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(vi)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(vii)    தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தீர்மானம்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ நலீன் பண்டார ஜயமஹ
(ii)    கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் வெற்றி” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கயாஷான் நவனந்த அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 செப்டெம்பர் 22ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks