பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான மாணிக்கம் மற்றும் நகை தொடர்பான தொழில்கள் பற்றிய இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி பற்றிய இராஜாங்க அமைச்சின் செயற்பாட்டு அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அமைச்சின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) (469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்தின் 71 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 22அ பிரிவின் கீழ் வனசீவராசிகள் பாதுகாப்பு, மின்சாரவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் மற்றும் காடு மீள்வளர்ப்பு அத்துடன் காட்டு வள அபிவிருத்தி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தல் இராஜாங்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 19 ஆம் திகதிய 2241/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூலை 31 ஆம் திகதிய 2238/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ அஜித் மான்னப்பெரும
(ii) கௌரவ புத்திக பத்திறண - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
கோவிட்-19 இலிருந்து எழுந்துள்ள விடயங்கள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
நீதிபதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக 2021.08.17 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நீதி அமைச்சர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ ரணில் விக்கிரமசிங்க
பதினான்காவது திருத்தம் தொடர்பாக தனக்கெதிரான மனு
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் -திருத்தங்களுடன்
(ii) நிதிச் சட்டமூலம் -திருத்தங்களுடன் (இரண்டாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு (ஆதரவாக 134; எதிராக 44))
(iii) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iv) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(v) இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
(ii) கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சேதன உரத்திற்கான உற்பத்தி பொறிமுறை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுதத் மஞ்சுல அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1856 மணியளவில் பாராளுமன்றமானது 2021 செப்டெம்பர் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks