பார்க்க

E   |   සි   |  

2021 செப்டெம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழான பிரகடனம்
B: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

C : “மனித உரிமைகள் அமைப்பு (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
D : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
E : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
F : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கடமையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின்  2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதிய 2243/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(ii)    2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 194 ஆம் பிரிவின் கீழ், பரிமாற்று விலைநிர்ணய ஒழுங்குவிதிகள் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 02 ஆம் திகதிய 2217/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழங்குவிதிகள்.
(iii)    2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 194 ஆம் பிரிவின் கீழ், வருமான வரி விலக்களிக்கப்படும் தொழில்நுட்பவியல் மற்றும் இயன்றனவாக்கப்பட்ட சேவைகளைக் குறித்துரைத்து நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 29 ஆம் திகதிய 2234/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதிசோ் வரிச் சட்டத்தின் 75 ஆம் பிரிவின் கீழ், பெறுமதிசோ் வரி விலக்களிக்கப்படும் தொழில்நுட்பவியல் மற்றும் இயன்றனவாக்கப்பட்ட சேவைகளைக் குறித்துரைத்து நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 29 ஆம் திகதிய 2234/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 8 ஆம் பிரிவுடன் சோ்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 6(2) ஆம் பிரிவின் கீழ், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வர்த்தக விளம்பரங்களுக்கான அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மே 10 ஆம் திகதிய 2227/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழங்குவிதி
(vi)    2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2021.06.22 முதல் 2021.07.29 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ மஹிந்த அமரவீர
(ii)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார  -    ஐந்து மனுக்கள்
(iii)    கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர
(iv)    கௌரவ நிரோஷன் பெரேரா                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தம்) - (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தம்) - 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 132; எதிராக 51) பின்னர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1645 மணியளவில் பாராளுமன்றமானது 2021 செப்டெம்பர் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks