பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: “நிதி” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
C : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XV ஆம் பகுதியையும் ; மற்றும்
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVII மற்றும் XXVIII ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XIII ஆம் பகுதி மற்றும் ஆறாவது தொகுதியின் XXIV மற்றும் XXV ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் –
எட்டாவது தொகுதியின்-
• இலங்கையில் கழிவுநீர் முகாமைத்துவத்தின் வினைத்திறனை மதிப்பிடுதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் IV ஆம் பகுதி ; மற்றும்
• கப்பல்களினால் இடம்பெறுகின்ற கடல் மாசடைதலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் மார்போல் உடன்பாட்டை இலங்கையில் செயல்படுத்துதல் மீதான செயல் முன்னேற்றம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் V ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னோலொஜி (உத்தரவாத) நிறுவனத்தினால் வழங்கப்படும் பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2216/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) ஆம், 6 ஆம் மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 11 ஆம் திகதிய 2231/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(vii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) ஆம், 6 ஆம் மற்றும் 14 பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 11 ஆம் திகதிய 2231/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(viii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) ஆம் மற்றும் 14 பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 11 ஆம் திகதிய 2231/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிலாக கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களுக்கு பதிலாக கௌரவ வசந்த யாப்பாபண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) நீதி அலுவல்கள் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
(iii) கௌரவ உத்திக பிரேமரத்ன
(iv) கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ
(v) கௌரவ மதுர விதானகே
(vi) கௌரவ யதாமிணீ குணவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
நீதிபதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினாலும், 2020 ஆகஸ்ட் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தினாலும் தடைபெறாமல், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச்சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் வேறு இருபத்தொரு (21) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(iii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள்
(iv) தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான
(ii) கௌரவ முஜிபுர் ரஹுமான்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சேதனப் பசளை உற்பத்திக்கான வழிமுறை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுதத் மஞ்சுல அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1659 மணியளவில் பாராளுமன்றமானது 2021 செப்டெம்பர் 06ஆந் திகதி திங்கட்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks