பார்க்க

E   |   සි   |  

2021 ஆகஸ்ட் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A: பொது மனுக்கள் பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
B : புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
C : நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
D : சுற்றாடல் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற  விவகார இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2020 ஆம் ஆண்டுக்கான பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ எம். எஸ். தௌபீக்                    
(ii)    கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சிறப்புரிமைக் கேள்விகள்

(i)    கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர

தன்னைப் பற்றி கௌரவ நலீன் பண்டார ஜயமஹ தெரிவித்த அவதூறான கருத்துக்கள்

(ii) கௌரவ எம்.ஏ. சுமந்திரன்

கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் வீடியோ காட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு முகநூலில் வெளியிடப்பட்டுள்ளமை


அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 (1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு 2020 செப்டெம்பர் 08 ஆம் திகதி மற்றும் 2021 ஆம் ஆண்டு சனவரி 07 ஆம் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முப்பது (30) அமைச்சுசார் ஆலோசைனக் குழுக்களுக்கு மேலதிகமாக பின்வரும் அமைச்சுசார் ஆலோசைனக் குழு பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உாிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.

ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு “சமாதானம், கல்வி, வலுவளிப்பு மற்றும் அபிவிருத்திக்கான விளையாட்டு நிறுவகத்தை (SPEED) கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ வேலுகுமார்
(ii)    கௌரவ மொஹமட் முஸம்மில்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பிரதேச செயலகத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு அதிகாரமளித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1742 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஆகஸ்ட் 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks