பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கட்டளைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியின் ஆண்டறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழத்தின் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii) 2019 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கறிக்கையும்
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குக் கூற்று
(ix) 2020 ஆம் ஆண்டுக்கான கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x) 2018 ஆம் ஆண்டுக்கான நீர் வளச் சபையின் வருடாந்த அறிக்கை
(xi) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xii) 2017/2018 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiii) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv) (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 8 ஆம் மற்றும் 30 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 25 ஆம் திகதிய 2216/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 07/2021)
(xv) திருத்தப்பட்டவாறான, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3, ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 05 ஆம் திகதிய 2222/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi) திருத்தப்பட்டவாறான, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 05 ஆம் திகதிய 2222/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii) திருத்தப்பட்டவாறான, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2224/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 22 ஆம் திகதிய 2216/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 மார்ச் 09 ஆம் திகதிய 2218/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 மார்ச் 19 ஆம் திகதிய 2219/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 19 ஆம் திகதிய 2224/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxii) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 யூன் 11 ஆம் திகதிய 2231/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிலாக கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ லசந்த அலகியவன்ன - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி
(iii) கௌரவ எச். நந்தசேன - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
கோவிட்-19 இன் எழுச்சி
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு தொடர்பான கூற்றொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்கள் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களுக்கு “அருந்திக பர்னாந்து நிவாரண சேவைகள் மற்றும் கொட்பிறி பர்னாந்து ஞாபகார்த்த மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுக்கு “மனித உரிமைகள் அமைப்பினைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(iii) கெளரவ சாரதீ துஷ்மந்த அவர்களுக்கு “பலாங்கொடை ஆனந்த மைத்திரிய மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“2020 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஆகஸ்ட் 04ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks