சட்டமூலங்கள் சமர்ப்பணம்
"இந்திய வம்சாவழியினரான ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்கல் (திருத்தம்)" என்ற தலைப்பிலான சட்டமூலம்
பிரதம அமைச்சரும், உள்ளக நிர்வாக அமைச்சரும், பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்றத்தின் அரசாங்க முதற்கோலாசான் 2003ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க, இந்திய வம்சாவழியினரான ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்கல் எனும் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்ட மூலத்தை பிரேரித்தார்.
"நாடற்ற ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்)" என்ற தலைப்பிலான சட்டமூலம்
பிரதம அமைச்சரும், உள்ளக நிர்வாக அமைச்சரும், பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்றத்தின் அரசாங்க முதற்கோலாசான் 1988ஆம் ஆண்டின் 39ஆம் இலக்க, நாடற்ற ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைப் பிரேரித்தார்.
"காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் (திருத்தம்)" என்ற தலைப்பிலான சட்டமூலம்
காணி அபிவிருத்தி அமைச்சர் சார்பாகப் பாராளுமன்றத்தின் அரசாங்க முதற்கோலாசான் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைப் பிரேரித்தார்.
"இலங்கைப் போக்குவரத்துச் சபை (திருத்தம்)" என்ற தலைப்பிலான சட்டமூலம்
2005ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க, இலங்கைப் போக்குவரத்துச் சபைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை போக்குவரத்து அமைச்சர் பிரேரித்தார்.
பிரேரணை முன்னறிவித்தல்கள்
ஆலோசனைக்குழுக்கள்
நிலையியற் கட்டளை இல. 106இன் ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2008.07.08ஆந் தேதிய பிரேரணை என்பன எவ்வாறு இருப்பினும், பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும்பற்றிய ஆலோசனைக்குழுவானது, தெரிகுழுவினால் நியமிக்கப்பட்ட ஐந்திற்குக் (05) குறையாத ஆனால் முப்பத்து மூன்றிற்கு(33) மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று பாராளுமன்றத்தின் அரசாங்க முதற்கோலாசானால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையைச் சபை ஏற்றுக்கொண்டது.
பொது மனுக்கள் பற்றிய குழு
நிலையியற் கட்டளை இல.128 இன் ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2008.07.08ஆந் தேதிய பிரேரணை என்பன எவ்வாறு இருப்பினும், பொது மனுக்கள் பற்றிய குழுவானது தெரி குழுவினால் தெரிவு
செய்யப்படும் முப்பத்து மூன்று (33) உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று பாராளுமன்றத்தின் அரசாங்க முதற்கோலாசானால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையைச் சபை ஏற்றுக்கொண்டது.
"1981 ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க, இலங்கை சிறுகைத்தொழிற்சபை (கூட்டிணைத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்"
இச் சட்டமூலத்தைக் கொண்டுவர கெளரவ (திருமதி) நிரூபமா ராஜபக்ஷ அவர்
களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்
தகவல் அத்துடன் தொடர்புத் தொழில் நுட்பவியல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
ஒத்திவைப்பு வேளையின் போது "மிஹின் எயார்" மீதான பிரேரணை கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, பி. ப. 04.30 மணியளவில் பாராளுமன்றமானது 2008 செப்டம்பர் 24ஆந் திகதி புதன்கிழமை மு. ப. 09.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.