E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

தேசிய பொதுவழிகள் என்ற தலைப்பிலான சட்டமூலம்

பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்றத்தின் அரசாங்க முதற்கோலாசான், இலங்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுவீதி வலைப்பின்னல் ஒன்றின் திட்டமிடுகை, வடிவமைப்பு, நிருமாணம், அபிவிருத்தி, பேணுகை அத்துடன் நிருவாகம் என்பவற்றுக்காக ஏற்பாடு செய்வதற்காகவும்; வீதி நிருமாணத்தில், அபிவிருத்தியில் மற்றும் பேணுதலில் தனியார்துறை முதலீடு மற்றும் பங்களிப்பு என்பவற்றுக்கு வசதியளிப்பதற்கு அவசியமான சட்டவரைவுருவொன்றை ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன்; வீதிகளின் அபிவிருத்தி மற்றும் பேணுகையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூரதிகாரசபைகளுக்கு உதவுவதற்கும்; வீதிகள் மற்றும் பொதுவீதிகளின் நிருமாணம், பேணுகை அத்துடன் முகாமையில் ஈடுபடுகின்ற சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களை மேம்படுத்துவதற்கும், வசதியளிப்பதற்கும்; அத்துடன் அதனுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தைச் சபையில் சமர்ப்பித்தார்.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன :-
ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேணை

ஹொரணை ஸ்ரீபாலி வளாகத்தைப் பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தல் பற்றிய ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணையானது கௌரவ பியசிறி விஜேநாயக்க பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து பி. ப. 04.00 மணியளவில் பாராளுமன்றமானது 2008 செப்டம்பர் 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks